ஒரு டைல்ஸில் பாலினை ஒரு சொட்டு ஊற்றி பார்த்தால் அதில் ஒட்டி மெதுவாக வழிந்தால் நல்ல கலப்படமற்ற பால் அதுவே உடனே வழிந்தால் கலப்படமுடையது.
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து கண்ணாடி கிளாஸ் ல் தன்னீர் ஊற்றி எண்ணெயும் கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும். ப்ரீசரில் வைக்க கூடாது. தண்ணீருடன் கலந்து சமமாக கட்டி ஆகிருந்தால் கலப்படம் இல்லை. தனியாக பிரிந்து வேறு வேறாக எண்ணெய் இருந்தால் கலப்படம்.
தேனை ஒரு கப் தண்ணீரில் ஒரு டிராப் ஊற்றினால் பிரியாமல் இருந்தால் கலப்படம் இல்லை. பிரிந்து தண்ணீரோடு கலந்தால் கலப்படம் அல்லது ஒரு திரியினை தேனில் இட்டு எடுத்து தீயில் பற்றினால் டப்டப் சத்தம் வந்தால் கலப்படமான தேன்.
பருப்பு வகைகளில் உள்ள கல்லினை கண்களால் அறியலாம். அந்த பருப்பு வகையினை ஒரு கப் தண்ணீரில் போட்டு விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் பருப்பில் இருந்து கலர் உண்டாகும். தண்ணீரில் அப்படி வந்தால் கலப்படமான பருப்பு.
சீரகத்தினை உள்ளங்கையில் வைத்து தேய்த்து பார்த்தால் கருப்பாக மாறினால் கலப்படம் உள்ளது.
கண்ணாடி கப் தண்ணீரில் நல்ல மிளகை போடவும். கீழே தங்காமல் மேலேமிதந்தால் அவை பப்பாளி விதை கலப்படமாகும்.
ஒரு ஃப்ல்ட்டர் பேப்பர் எடுத்து டீ தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து தண்னீரில் நனைத்து பார்த்தால் அதிக சாயம் வெளியேறினால் கலப்படமானது.
சிறிது காயம் எடுத்து தன்னீரில் போட்டு பார்த்தால் அடியில் சோப்பு கற்களை அல்லது ஏதேனும் தங்கினால் கலப்படமாகும்.
Discussion about this post