இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு இலங்கை விடுதலை கட்சி, ஒருங்கிணைந்த தேசிய கட்சி இணைந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார். இந்நிலையில், சிறிசேனா கட்சி அரசில் இருந்து திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. இதனைதொடர்ந்து உடனடியாக ராஜபக்சேவை பிரதமராக முன்மொழிந்தார் அதிபர் சிறிசேனா. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன் அடிப்படையிலேயே, ராஜ பக்சே பிரதமராக பதவியேற்றார்.
Discussion about this post