சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் காசோகி. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு சென்ற போது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கருத்து கூறிய துருக்கி அரசு, சவுதியை சேர்ந்த 15 உளவுத்துறை அதிகாரிகள் தூதரகத்திற்கு வந்ததாகவும் , அவர்கள் ஜமால் காசோகியை திட்டமிட்டு படுகொலை செய்ததாகவும் குற்றம்சாட்டியது. இச்சூழலில், இந்த படுகொலையில், சவுதி அரசுடன் அமெரிக்கவும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post