பாலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ ‘தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா சோப்ரா பிலிம்ஸ் பிரம்மாண்டமான முறையில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக்கியுள்ளது.
பெரும் பொருட்செலவில், உருவாகி உள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படத்தின்டிரைலர் கடந்த மாதம் வெளியானது. இந்த டிரைலர் இதுவரை 7 கோடியே 28 லட்சம் பேர் இதுவரை பார்த்து ரசித்துள்ளனர். தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு பாகுபலியை போல் பெரும் பிரம்மாண்டமான விருந்தாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post