இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியும், 2-வது போட்டி டையில் முடிந்தது. இன்று 3-வது ஒருநாள் போட்டி புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரை அடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தோனி நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post