ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
‘மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ திரைபப்ட விருது விழாவில் ’சர்வம் தாளமயம்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக இசையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் இசையமைப்பாளரான நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்திருப்பது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Discussion about this post