தமிழ் சினிமாவில் ‘தெளிவான’ தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அதனால்தான் அவரது படங்கள் தோல்வி அடைந்தாலும் அவரது பிஸ்னஸ் தோல்வி அடையாது. அம்புட்டு நேக்காக காயை நகர்த்தி கேம் ஆடுவார்.
இந்நிலையில் மாமனார் ரஜினிகாந்தை வைத்து மருமகன் தனுஷ் தயாரித்த ‘காலா’ படம் நிதி பஞ்சாயத்தில் சிக்கியது. அந்த இடியாப்ப சிக்கலை மிக தெளிவாக சரி செய்து, தனுஷை வெளியே எடுத்துவிட்டது தாணுதான். இதற்கு நன்றிக்கடனாக தாணு தயாரிப்பில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்துக் கொடுக்கிறேன்! என்று அட்வான்ஸ் கால்சீட் கொடுத்துவிட்டாராம் தனுஷ்.
ப்பார்ரா தாணு எம்பூட்டு கில்லி? என்று கோலிவுட் சீனியர்கள் நினைத்திருக்க அப்புறம்தான் தெரிந்தது தனுஷின் சாமர்த்தியம். அதாவது தனுஷ் ஏற்கனவே வடசென்னை படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பார்ட்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதை தனுஷின் ‘வுண்டர் பார்’ நிறுவனம் தயாரிப்பதாய் பார்ட்னர்ஷிப்பில் இருந்தது. இந்நிலையில் இதில் இரண்டாம் பாகத்தைத்தான் தாணுவை தயாரிக்க சொல்லி கேட்டிருக்கிறாராம் தனுஷ், டீல் கிட்டத்தட்ட ஓ.கே.வாம்.
எப்பூடி!… வடசென்னை பார்ட் -2வை தாணு செலவில் முடித்தாற்போலும் ஆச்சு, தாணுக்கு சொன்ன வாக்கை காப்பாற்றியது போலும் ஆச்சு. இந்த கில்லாடித்தனம் லேட்டாக தாணுவுக்கு புரிய மனிதருக்கு செம்ம ஷாக்.
கொக்கி குமாரா கொக்கா?
Discussion about this post