தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கென்று தனி மரியாதை இருக்கிறது. துவக்கத்தில் ஆபாச இயக்குநராக பட்டம் தரப்பட்டவர் பின் மெதுவாக அதிலிருந்து விலகி, விலகி நுணுக்கமான உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மிக சில இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
அவரது முந்தைய படமான இரண்டாம் உலகம் சரியாக போகவில்லை. அதன் பின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய படத்துக்கு ஸ்க்ரீன்பிளே மட்டும் செய்தார். அதுவும் பெரிதாய் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முடித்தார். பேய்ப் படமான அது ரிலீஸுக்கு வழியில்லாமல் கிடக்கிறது.
இந்நிலையில் சூர்யாவை வைத்து ‘என்.ஜி.கே.’ எனும் படத்தை துவக்கினார். தனக்கும் ஒரு ஹிட் வேணுமென்பதால் சூர்யாவும் முழு ஈடுபாடுடன் நடித்தார். ஆனால் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட நாட்களை விட அதிகமாய் இழுக்கிறது ஷூட்டிங். இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால்சீட் தேவைப்படும் என்கிறாராம் செல்வா. ஆனால் சூர்யாவும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் கடுப்பாகி கிடக்கிறார்களாம்.
செல்வாண்ணே ஏதாச்சும் பார்த்து பண்ணுங்க!
Discussion about this post