தமிழ்நாட்டுல ஒரு சொல் உண்டு ‘உசுரு போற நேரத்திலும் ஊத்த மாட்டான் பால, ஆனா கால நீட்டி படுத்துப்புட்டா எவ்ளோ பெரிய மால?’ என்று. கிட்டத்தட்ட கருணாநிதியின் விஷயத்தில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது தே.மு.தி.க.
விஜயகாந்த் – பிரேமலதா திருமணத்தை நடத்தி வைத்ததே கருணாநிதிதான். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது கருணாநிதிக்கு பெரிய பாராட்டு விழா நடத்தி ஜமாய்த்தார்.
ஆனால் இந்த உறவு, கேப்டன் தே.மு.தி.க. ஆரம்பித்த பின் காணாமல் போனது. கருணாநிதி குடும்பத்தை தமிழகம் தோறும் பட்டி தொட்டிகளில் போட்டு கிழி கிழி என கிழித்தார் விஜயகாந்த். ஆனால் கருணாநிதி இறந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்த கேப்டன், கதறி அழுது வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.
இந்நிலையில் இப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் ‘எங்களுக்கு அப்பா ஸ்தானத்தில் அவர் இருந்தார். நாங்கள் கட்சி ஆரம்பிச்ச பிறகும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு குடும்பங்களுக்குள்ளும் நல்ல உறவு இருந்தது.’ என்று தட்டியிருக்கிறார் ஒரு ஸ்டேட்மெண்ட்.
இதுதான் டா அரசியல்!
Discussion about this post