தி.மு.க.வில் தன் அரசியல் பயணத்தை துவக்கிய நாஞ்சில் சம்பத் சில கட்சிகளை கண்டுவிட்டு, அரசியல் வெறுத்துப் போய், இலக்கிய மேடைகளில் மட்டுமே இனி தன்னை காண முடியும்! என்றார்.
ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் அவர் தி.மு.க.வில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தடதடக்கின்றன. இதைப் பற்றி கேட்டால் ‘ஆமாங்க அங்கேயிருந்தும் சில பேர் நம்மளை கூப்பிடுறாங்க. சில நண்பர்களும் அதை நோக்கியே நம்மை நகர்த்துறாங்க அதுதான் ஒரே யோசனையா இருக்குது.’ என்றிருக்கிறார்.
கூடவே, ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.வானது பட்டத்து யானை போல் இருந்ததாகவும், இப்போது அது பொதி சுமக்கும் கழுதை போல் ஆகிவிட்டதாகவும் நக்கல் செய்திருக்கிறார்.
ஆனாலும் இதற்கு முன்பு போல் இருந்தது போல் சம்பத்தின் இந்த ‘யு டர்ன்’ பெரிதாய் பரபரப்பாகவில்லை என்பதே உண்மை.
– எஸ்.நிஷா
Discussion about this post