காதல் ஜோடிகள் பரிசு அளித்துக்கொள்வது சகஜம். விரலுக்கு ஏற்ற வீக்கம்போல் சிலர் வாட்ச், வைர நெக்லஸ், விலை உயர்ந்த கார் பரிசளித்திருக்கிறார்கள். ஆனால் காதல் நடிகைக்கு வெளிநாட்டு காதலன் ரூ, 47 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா பரிசளித்து அசத்தியிருக்கிறார். அந்த அதிர்ஷ்ட நடிகை வேறுயாருமல்ல பிரியங்கா சோப்ராதான். உலக அழகியாக கடந்த 2000ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் பிரியங்கா சோப்ரா.
இவர் நடிகையாக தமிழ் திரையுலகம் மூலம் அறிமுகமானார். விஜய் ஜோடியாக நடித்த தமிழன் படம் அவரது முதல்படம். 2002ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. அதன்பிறகு இந்திபடங்களில் நடிக்கச் சென்ற பிரியங்கா சோப்ரா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்வதுடன் ஹாலிவுட் படங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்ற பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் உடன் காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களாகவே அவர்கள் டேட்டிங் செய்து வந்தனர். சமீபத்தில் அவர்களது நிச்சய தார்த்தம் நடந்தது. வரும் நவம்பர் 29ம் தேதி இவர்களது திருமணம் நடக்க உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்காவுக்கு அவரது காதலன் நிக் ஜோனஸ் ஆடம்பர பங்களா பரிசளித்திருக்கிறார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் உள்ள இயற்கை அழகு நிறைந்த பெவர்லி மலைப்பகுதியில் ஆடம்பர பங்களா அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவில் பெரிய படுக்கை அறை, நீச்சல் குளம், லைப்ரரி, நவீன வசதிகளுடன் கூடிய பாத்ரூம், கண்ணை கவரும் வரவேற்பு அறை என பலவித வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலரில் இதன் மதிப்பு 6.5 மில்லியன் டாலர். தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ.47 கோடி 54 லட்சம் ஆகும்.
Discussion about this post