’எத்தனை காதல் பண்ணினா என்ன, அத்தனையையும் உண்மையா பண்ணனும்’ அப்படிங்கிறதுதான் நயன் தாராவின் பாலிஸி, அந்த வகையில் கடந்த சில வருடங்களாக விக்னேஷ் சிவனை தாறுமாறாக லவ்விக் கொண்டிருக்கிறார் நயன்.
இதுவரையில் கடந்து வந்த நபர்கள்தான் நயனை ஏமாற்றியிருக்கிறார்கள், ஆனால் இவர் யாரையும் ஏமாற்றவில்லை! என்று கிசுகிசுக்கும் கோலிவுட் பட்சி, அதனால்தான் விக்னேஷ் விஷயத்திலும் தான் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக விக்கி மீது ஏக பொசஸ்சிவ்னெஸில் இருக்கிறாராம்.
ஒரு நாள் கூட அவரைப் பிரிவதில்லை, சென்னையில் ஷூட் என்றால் இரவில் சந்திக்கும் இந்த ஜோடி, நயனுக்கு அவுட்டோர் ஷூட் என்றால் விக்கியையும் கையோடு வரச்சொல்கிறாராம்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வாங்கி, கால்சீட்டுக்கு ஆளாளுக்கு அலைபாயும் நயன் தனக்காக ஏங்குவதில் விக்கிக்கு தலைகால் புரியாத சந்தோஷம்தான். ஆனாலும், நயன் கூடவே 24 x 7 இருக்க வேண்டி இருப்பதால் அவரால் புதிதாக எந்தப் படத்திலும் கமிட் ஆக முடியவில்லையாம், கதை எழுத முடியவில்லையாம். இதை தன் நெருங்கிய வட்டாரத்தில் கூறிப் புலம்பியிருக்கிறார்.
விஷயம் அரசல் புரசலாக நயனின் காதுகளை எட்ட, காதலனுக்காக மேடமே தயாரிக்கிறார் புதுப்படம். ஷூட்டிங்கை விக்னேஷ் இயக்க, அவரை நயன் இயக்குவாராம். விக்கி அந்தப் படத்தின் ஷூட் வேலைகள் முடியும் வரை நயன் புதிதாய் எந்தப் படத்திலும் ஒத்துக் கொள்ளப்போவதில்லையாம்.
Discussion about this post