இயக்குநர் சிறுத்தை சிவாவை அவரது குடும்பத்தைக் கூட போய் பார்க்க முடியாதபடி தொடர்ந்து நான்காவது படத்திலும் தன் கூடவே வைத்திருக்கிறார் அஜித். இவர்களின் கூட்டணி ஹாட்ரிக்கை தாண்டியிருப்பதை அஜித்தின் ரசிகர்களே விரும்பவில்லை. இதனால் கழுவிக் கழுவி ஊற்றினர் இணையதளத்தில்.
இதைப் பார்த்து தல!யே தாறுமாறாக டென்ஷாகிவிட்டாராம். விளைவு, இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தை உட்கார்ந்து உட்கார்ந்து செதுக்குகிறது சிவ – அஜித் கூட்டணி.
சரி கதை எப்படியாம்? என்று கேட்டால், நான் ஸ்டாப் காமெடிதான் விஸ்வாசம்! என்கிறார்கள். அதேபோல் இதுவரையில் இல்லாத வகையில் இந்தப் படத்தில் பாடல்களுக்கு செம்ம முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் அஜித். ஐந்து பாடல்கள், அத்தனையும் அல்டிமேட் ஹிட் ரகங்கள்தான்! என்று கிசுகிசுக்கிறது க்ரூ.
தட்டி எறியுங்க தல!
Discussion about this post