உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்வர் நாராயணசாமி தயாரா துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமைப்பொருள் வழங்கல் துறையிலிருந்து பாப்ஸ்கோவுக்கு 7.5 கோடி ரூபாய் அனுப்ப பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்றும் இலவச அரிசி திட்டத்திலிருந்து நிதியை பாப்ஸ்கோவுக்கு மாற்றுவது சரியானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து என் மீது பொய்களும், புகார்களும் தெரிவிப்பதாகவும் இவ்விஷயத்தில் இருவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தி அதை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும் கிரண்பேடி கூறியுள்ளார் இந்த சோதனைக்கு நான் தயார்- முதலமைச்சர் நாராயணசாமி தயாரா என கேள்வி எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்,
Discussion about this post