ஆள் ஹாண்ட்சமாகதான் இருக்கிறார் ஜெய்! ஆனால் ஒப்பேறவே ஒப்பேறாத படங்களில் நடிப்பதால் சறுக்கிச் சறுக்கி விழுகிறார் என்று கோலிவுட் உச்ச்ச் கொட்டுகிறது.
நடிகர் ஜெய்யை அடுத்த விஜய்! என்று ஆரம்பத்தில் புகழ்ந்தது தென்னிந்திய திரையுலகம். அதை மெய்ப்பிக்கும் வகையில்தான் வெங்கட்பிரபுவின் படங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கலக்கி வந்தார் ஜெய்.
அடுத்து சுப்பிரமணியபுரம் அவரது கிராபை எங்கேயோ ஏற்றிவிட்டது. ’அழகர்’ கேரக்டரை அத்தனை அழகாய் பண்ணியிருந்த மனிதர் அடுத்தடுத்து வலுவான கதைகளாய் பிடித்துப் பயணித்திருந்தால் இந்நேரம் விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் உயர்ந்திருக்கலாம்.
ஆனால் சொதப்பல் கதைகளாய் பார்த்துப் பண்ணுவதோடு மட்டுமில்லாமல், அஞ்சலியோடு ஒப்பேறாத காதல், அடிக்கடி குடித்துவிட்டு போலீஸில் சிக்குவது என்று சர்ச்சை நாயகனாகி தனது கேரியர் மற்றும் பர்ஷனல் ரெண்டையுமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரது ‘ஜருகண்டி’ ஃபிளாப் ஆனதை தொடர்ந்து கோலிவுட் இப்படித்தான் வருத்தப்படுகிறது.
ஜெயிக்க வேண்டிய ஜெய் தோற்றுக் கொண்டே இருப்பதற்கான காரணம், அவர் மட்டுமே என்பது தெளிவு.
Discussion about this post