பேசிப் பேசி வளர்ந்தவைதான் திராவிட கட்சிகள். இதற்கு நச் உதாரணம் நாஞ்சில் சம்பத். அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்றாலும் பரவாயில்லை, அவருடைய நயம் தெறிக்கும் நக்கல் பேச்சைக் கேட்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.
அங்கே சுற்றி, இங்கே சுற்றி மீண்டும் தி.மு.க.வில் ஐக்கியமாக இருப்பவர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் பற்றி பேசியிருக்கும் விஷயமானது இரு தரப்பையும் கடுப்பேற்றி இருக்கிறது.
“கட்சி துவங்குகிறேன் என்று போக்கு காட்டிக் கொண்டே இருக்கிறார் ரஜினி. அரசியலின் முதல் படியாக மக்கள் மன்றம் என்ற ஒன்றை துவக்குவது போல் காட்டி, அதன் நிர்வாகிகளை நீக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். கானல் நீரான அவரை நம்பி ஏமாந்துவிட்டோம்! என்று அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர். ரஜினி ஒரு மாயமான்.
கமலுக்கு எது அரசியல், எது தன் திசை, எது தன் கொள்கை, யார் தன் அரசியல் எதிரி? என எதுவும் தெரியாமல் குழம்பியும், குழப்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த கொடுமைகளுக்கு நடுவில், ஒரேயொரு நம்பிக்கை கீற்று தி.மு.க.தான்.!” என்றிருக்கிறார்.
ப்பார்றா!…..
Discussion about this post