ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்கார் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறியிருந்தார். இதற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்தும் இருந்தார்.
இந்நிலையில், சர்கார் படத்திற்கு வனசம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன், கடந்த 20 ஆண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம் தான் என்றும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post