ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எல்லா இயக்கமும் பொது சேவை செய்யும் எண்ணத்தோடு வர வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து கூறியதாக தெரிவித்தார். கடந்த 1996ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து இருந்தால் முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார். தற்போது ரஜினிக்கு 69,70 வயதாகி விட்டதாகவும் சுற்றுபயணம் மேற்கொள்ள ரஜினிக்குவருக்கு உடல் ஒத்துழைக்காது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Discussion about this post