தென் மண்டல தி.மு.க.வினருக்கு இப்போதும், எப்போதும் அழகிரி மீது ஒரு பயம் உண்டு. ஆனானப்பட்ட தி.மு.க.வினர் கூட அழகிரியை விமர்சிக்க பயப்படுவார்கள். ஆனால் லியோனியோ பிரித்து மேய்ந்துவிடுவார் அழகிரியை.
கருணாநிதி இருக்கும்போதே அழகிரிக்கு பயப்படாத லியோனி, இப்போது அடங்கியா இருப்பார்? சமீபத்தில், அழகிரியின் செயல்பாடுகள் தி.மு.க.வை பாதிக்குமா? என்று கேட்டதற்கு “தி.மு.க.தலைவர் கருணாநிதி இருந்தபோதே கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அழகிரி.
தலைவர் இறந்த பிறகு பல விதத்தில் எதிர்ப்புக் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரால் கட்சியில் அமைப்பு ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட தி.மு.க.வை உடைக்க வேண்டும் எனும் எண்ணம் கண்டிப்பாக அழகிரியிடம் இருக்காது.” என சுளீரென போட்டுத் தாக்கியிருக்கிறார்.
இதே லியோனிதான் சில வருடங்களுக்கு முன்பாக, அழகிரி மகன் துரை தயாநிதி தன் ட்விட்டரில் தி.மு.க.வின் இடைத்தேர்தல் வேட்பாளரான டாக்டர் கணேஷை நக்கலடித்தற்காக புரட்டி எடுத்துவிட்டார். அதன் பிறகு லியோனி மீது அழகிரி கோஷ்டிக்கு கடுப்பு இருந்தாலும் கூட ஸ்டாலினின் ஆசி அவருக்கு இருப்பதால் ஒன்றும் பண்ண முடியவில்லை.
Discussion about this post