அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் மட்டுமல்ல என்றும் அதற்கு மேலும் நீடிக்கும் எனவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் சகோதார்களே திரும்பி வரவேண்டும் என்றும் ஒரு மாதத்தில் இடைத்தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். தற்போதைய நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றும் வார்டு மறுவரையறை பணிகள் முடியாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது எனவும் தெரிவித்த மாஃபா பாண்டியராஜன், தேர்தலை தள்ளிப்போடும் நோக்கம் அதிமுகவிற்கு இல்லை என்றார்.
Discussion about this post