தேர்தலுக்கு எப்பவுமே முன்கூட்டியே தயாராவது கருணாநிதியின் வழக்கம். அதை அப்படியே கேட்ச் செய்து வைத்திருக்கும் ஸ்டாலின், இதோ நாடாளுமன்ற தேர்தலுக்காக பொறுப்பாளர்களை அறிவித்து ஃபர்ஸ்ட் கியரை போட்டுவிட்டார்.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை ஆராய்ந்து, கட்சிக்கு அறிக்கை அளிப்பதற்காக இரண்டு இரண்டு நபர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இந்த எண்பது நபர்களையும் கவனித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே புது முகங்கள் மற்றும் இளைஞர்கள்தான். சீனியர்களுக்கு செம்ம செக் வைத்துவிட்டார் ஸ்டாலின்.
தி.மு.க. என்றாலே அரதப் பழைய அதே செல்வந்தர் நபர்களின் கூடாரம்தான்! என்பது மக்களுக்கே கடுப்பை தரும் நிலையில் அக்கட்சி தொண்டர்களுக்கு எவ்வளவு கோபமாக இருக்கும்? அதனால்தான் புதிய முகங்களுக்கும், புது ரத்தங்களுக்கும் வாய்ப்பு கொடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் இறக்கிவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த நபர்கள், அத்தனை நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள பூத் நிலைகளை ஆராய்ந்தும், மாவட்ட செயலாளர்கள் ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்திருந்தால் அதை திரட்டியும் தலைமைக்கு அறிக்கை தருவார்களாம். இதன் மூலம் தகுதியான நபர், வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது! என்கிறார்கள்.
பார்க்கலாம் தளபதி!
– எஸ்.நிஷா
Discussion about this post