வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்போது, இவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் கூட்டத்தின் காரணமாகவும், சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்ததாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்தை போலீசார் முற்றாக தடை செய்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் ரசிகர்களின் கும்பலுக்கிடையே கார் மாட்டிக் கொண்டதோடு, நகர முடியாமல் நின்றது. காருக்கு வழிவிடாத ரசிகர்களால் மீண்டும் நெரிசல் உருவானதையடுத்து, ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார். இதனால், அடிதாங்க முடியாமல் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
Discussion about this post