தந்தை வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகள், சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீ டூ பிரச்சனையை பொழுதுபோக்காக சித்தரித்து, நாட்டில் நிலவும் வேறு பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் அளித்திட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், வைரமுத்துவின் எழுத்தைவிட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது, பாடம் நிறைந்தது என்றும் வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்தநினைக்கிறவர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் எனவும் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post