இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நடிகை கங்கனா ரணவத் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரைப்படங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் படங்கள் ஹிந்தி பேசும் மாநிலங்கள் அனைத்திலும் ஓடுவதால் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகின்றன. அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த வருடம் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படசூகானோ முதலிடம் பெற்றிருந்தார். அவர் ஒரு படத்திற்கு 13 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார்.
இவர் நடித்த பத்மாவத் திரைப்படம் 215 கோடியில் எடுக்கப்பட்டு 580 கோடி ரூபாய் வசூலித்தது.தீபிகாவுக்கு அடுத்தபடியாக கங்கனா ரணவத் 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இரண்டாவதுஇடத்தில் இருந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் கங்கணா ரணவத் முதலிடத்தை பிடித்துள்ளார். ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் மணிகர்னிகா திரைப்படத்தில் கங்கனா ரணவத் லட்சுமிபாயாக நடித்துள்ளார். இப்படத்திற்காக கங்கனா 14 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்தி திரையுலகில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post