இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கன்னாபின்னாவென உடல்எடையை கூட்டி நடித்த அனுஷ்கா தற்போது அந்த எடையை குறைக்க முடியாமல்தவித்து வருகிறார்.
பாகமதி படத்திற்காக சிறிதளவு எடையை அனுஷ்கா குறைத்தார். ஆனால் மீண்டும் தற்போது எடை ஏறியுள்ளார். இதனால் தற்போது புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. தனது உடல் எடையை குறைப்பதற்காக அனுஷ்கா தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றில் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
“ நான் கதாபாத்திரத்திற்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல்அடையாளம் என இயக்குநர்கள் கூறுகிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் என்னடைய கதாபாத்திரம் அனைவருடைய மனதையும் தொட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். என்னை நம்பி இதுபோன்ற கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குநர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்தை உங்களால் தான் செய்ய முடியும் என அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன், கூட்டிய எடையை குறைப்பத அவ்வளவு சுலபமல்ல.
எடையை குறைக்கும் முயற்சியில்தான இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு இருந்த உடல் தோற்றத்தை பெற்ற பிறகுதான் சினிமாவில் தீவிரமாக நடிக்க இருக்கிறேன். தற்போது எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. ஆனால் எடையை குறைத்த பிறகுதான் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
Discussion about this post