சினிமாவில் அண்மைகாலமாக பலரையும் அதிர்ச்சியாக்கிய விசயம் Me too. திரையுலக பிரபலங்கள் பலரும் இதில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வைரமுத்து – சின்மயி, ஜான் விஜய் – ஸ்ரீ ரஞ்சனி, சுசி கணேஷன் – லீனா, அர்ஜுன், ஸ்ருதி என பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது
மீ டூ ல் குற்றம்சாட்டுபவர்கள் தங்களை மட்டுமில்லாமல், தங்கள் குடும்பத்தையும் கேவலப்படுத்திக்கொள்கிறார்கள். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சங்கம் அமைக்க ஆதரவளிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
தாடி பாலாஜிக்கு நாக்கில் சனி என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
Discussion about this post