சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் என்கிற கதையும் ஒன்றுதான் என எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் கொடுத்த கடித்ததால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.
அவர் என் கதையை படிக்கவே இல்லை, பின்னர் எப்படி கதை ஒன்று என்று கூற முடியும் என்று முருகதாஸ் நேற்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள பாக்யராஜ், “நீ கொடுத்ததை தான் படிக்க முடியும். ஒவ்வொரு டைலாக்கையும் படித்துக்கொண்டிருக்கமுடியாது” என கூறியுள்ளார்.
மேலும் சர்கார் படத்தின் கதை என்ன என்பதை அவர் பேட்டியில் கூறிவிட்டார். “ஹீரோ அமெரிக்காவில் இருந்து இந்தியா வருகிறார், அவர் ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விடுகிறார்கள், அதனால் அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். தேர்தல் நிறுத்தப்படுகிறது. அதனால் அரசியல்வாதியுடன் மோதல் ஆரம்பிக்கிறது.”
“மீண்டும் மறுதேர்தல் வருகிறது. அதில் ஹீரோவே களத்தில் இறங்குகிறார், ஜெயிக்கிறார். பின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. சிஎம் ஆனாரா இல்லையா என்பது கிளிமாக்ஸ்” என சர்கார் படத்தின் மொத்த கதையையும் பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
இதனால் சர்கார் படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளது. ஒரு பிரபல இயக்குனரே இப்படி பொறுப்பில்லாமல் ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு முழுகதையை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் அந்த குறிப்பிட்ட பேட்டியில் இயக்குனர் கே.பாக்யராஜ் முருகதாஸை ஒருமையில் பல இடங்களில் பேசியுள்ளார். அதுவும் பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
Discussion about this post