விஜய் நடித்திருக்கும் சர்கார் படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளியன்ற திரைக்கு வர உள்ளது. விஜய் படம் என்றாலே தமிழகத்திற்கு அடுத்ததாக கேரளாவில் தான் அதிக வசூலை அள்ளும். ஆனால் இந்த முறை அதில் மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் மலையாளத்தில் தீபாவளியை எல்லாம் அவ்வளவு விமர்சையாக கொண்டாட மாட்டார்கள். அதனால் அந்த தேதியில் மற்ற மொழி நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய்யின் படம் தான் எல்லா திரையரங்குகளிலும் வெளியாகும். இதுதான் மெர்சலுக்கும் நடந்தது.
ஆனால் இம்முறை மோகன்லாலின் ட்ராமா படம் வருகிற 1ஆம் தேதி வெளியாக உள்ளதால் எப்போதும் மோகன்லாலுக்கென இருக்கும் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகும். இதனால் மிச்சமிருக்கும் திரையரங்களிலேயே சர்கார் வெளியாகும். இதனால் கேரளா தரப்பில் இருந்து வரும் வசூல் குறையும் என்றே தெரிகிறது.
சர்க்கார் தீபாவளியான 6ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இடைப்பட்ட 5 நாட்களில் ட்ராமாவின் தீவிரம் குறைந்தால் மட்டுமே சர்காரின் காட்சிகள் அதிகரிக்கும்.
Discussion about this post