கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிக்கும் படம், தேவ். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, ஹாரிஸ் ஜெயராஜ். படம் குறித்து இயக்குனர் ரஜத் ரவிசங்கர் கூறுகையில், ‘ஒரு இளைஞன் தான் நினைத்ததை சாதிக்க, எப்படிப்பட்ட சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பது கார்த்தியின் கேரக்டர்.
ராமலிங்கம் என்ற பெயருடன், தன் அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து, தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக்கொள்கிறார். சுருக்கமாக, தேவ். மற்றும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, வம்சி ஆகியோருடன் கார்த்திக், நிக்கி கல்ராணி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்’ என்றார்.
Discussion about this post