நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்தி, என்வழி தனி வழி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பூனம் கவுர். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு எவனும் புத்தனில்லை படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இதில் நபி நந்தி, சரத் அறிமுகமாகின்றனர். அவர்கள் ஜோடியாக சுவாசிகா, நிகாரிகா நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் எஸ்.விஜயசேகரன் கூறுகையில், ‘மலைவாழ் மக்கள் பின்னணியில் அண்ணன், தங்கை பாசம் குறித்து சொல்லும் படம். மேலும், இன்றைய சமூக வலைத்தளங்களின் அவலங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். பூனம் கவுர் சிறப்பு தோற்றத்தில் வந்து, ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இது ஹைலைட்டாக இருக்கும்’ என்றார்.
Discussion about this post