அமிதாப்பச்சன், ஆமிர்கான், கேத்ரினா கைப் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நவம்பர் 8ம் தேதி ரிலீசாகிறது. இதில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இதில் டான்ஸ் ஆடியிருக்கும் கேத்ரினா கைப் கூறியது: பிரபுதேவாவின் தீவிர ரசிகை நான். காதலன் படத்தில் வரும் முக்காபலா பாடலில் அவரது நடனத்தை பார்த்து வியந்துபோனவள். அந்த நடனத்தை பார்த்துவிட்டு அதுபோல் டான்ஸ் ஆட பலமுறை முயற்சி செய்திருக்கிறேன்.
இப்போது முதல்முறையாக அவரது நடன இயக்கத்தில் டான்ஸ் ஆடியது பெருமையாக இருந்தது. படத்தில் இந்த பாடலுக்காக மும்பையிலுள்ள ஸ்டுடியோவில் 3 நாட்கள் பயிற்சி எடுத்தோம். இதில் ஆமிர்கானும் கலந்துகொண்டார். எனக்கு நடனத்தில் பல நுணுக்கங்களை கற்க முடிந்தது. சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இப்போதுதான் நடனத்தை பற்றிய டெக்னிக்குகளை அறிந்துகொண்டேன். நன்றி பிரபுதேவா. இவ்வாறு கேத்ரினா கூறியுள்ளார்.
Discussion about this post