சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மாஜி மனைவி மலாய்க்கா அரோரா. கவர்ச்சி நடிகையான இவர், இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடங்களுக்கு முன் அர்பாஸ் கானை விட்டு பிரிந்தார் மலாய்க்கா. இதற்கிடையில் இளம் ஹீரோவாக அர்ஜுன் கபூருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. மலாய்க்காவுக்கு இப்போது 45 வயது. அர்ஜுன் கபூருக்கு 33 வயதுதான் ஆகிறது. தன்னை விட 12 வயது மூத்தவரை அர்ஜுன் காதலிக்கிறார். இது அர்ஜுனின் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை.
ஆனாலும் இருவரும் தனியாக லிவிங் டு கெதர் பாணியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பாலிவுட் மீடியா வட்டாரம் கூறும்போது, ‘ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்த அர்ஜுன் கபூர், மலாய்க்கா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர். தனது தங்கைகளின் திருமணத்துக்கு பிறகு அடுத்த ஆண்டு அர்ஜுன், மலாய்க்காவை திருமணம் செய்துகொள்வார்’ என்றனர்.
Discussion about this post