குள்ள மனிதனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மம்மூட்டி. மம்மூட்டி நடிப்பில் டபுள்ஸ் மலையாள படத்தை இயக்கியவர் சோஹன் சீனுலால். இதையடுத்து குள்ளர் வேடத்தில் ஹீரோ நடிக்க வேண்டிய கதை ஒன்றை உருவாக்கினார். இதில் திலீப் நடிக்க இருந்தார். திடீரென சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை.
இதையடுத்து மம்மூட்டியிடம் சோஹன் கதை சொல்லி அவரது சம்மதமும் வாங்கிவிட்டார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளர் வேடத்தில் கமல் நடித்திருந்தார். இப்போது இந்தியில் ஜீரோ படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதனாக நடித்திருக்கிறார். இந்த படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
Discussion about this post