முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்களை கண்டு ஆலமரங்கள் பயப்படுவதில்லைதான். ஆனால் காளான்களின் கவர்ச்சி சில நேரங்களில் ஆலமரத்தின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கும்!
ரஜினியின் அரசியல் தடபுடலால் தி.மு.க. லேசாக திணற துவங்கியிருப்பது இதற்கான மிக சரியான உதாரணம்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரஜினியின் ‘மக்கள் மன்ற’ நபர்கள் ரஜினிக்கு எதிராக கொதித்து எழுந்தனர். இதில் டென்ஷான ரஜினி விட்ட ஒரு அறிக்கை புயலை கிளப்பியது. இந்த விவகாரத்தினுள் புகுந்து தி.மு.க.வின் முரசொலி நாளிதழ் அடித்த ‘சிலந்தி கமெண்ட்ஸ்’ பிரளயத்தை கிளப்பியிருக்கிறது.
இந்த குசும்பு வேலைக்காக முரசொலிக்கு ஏக கண்டனங்கள். இதைத்தொடர்ந்து வருத்த விளக்கம் தெரிவித்துவிட்டது முரசொலி தரப்பு.
இதைப் பார்த்து இந்திராகாந்தி முதல் மோடி வரை பெரும் பிரதமர்களையே எதிர்த்து பெயர் பெற்ற முரசொலி இப்படி கட்சியே துவங்காத ரஜினியிடம் மடங்கியது, அவர் மீதான பயத்தைக் காட்டுகிறது! என்று கொளுத்திப் போட்டுள்ளனர் விமர்சகர்கள்.
சூப்பரப்பு!
Discussion about this post