வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

இந்தோனேசியாவில் கோர விபத்து….. 188 பயணிகளுடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்

October 29, 2018
in வைரல்ஸ்
இந்தோனேசியாவில் கோர விபத்து….. 188 பயணிகளுடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், இன்று காலை ஜாவா கடலில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில், 188 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு பங்க்கால் பினாங் தீவுக்கு 188 பேருடன் புறப்பட்டுச்சென்ற, லைன் ஏர் பிளைட் என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13வது நிமிடத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான இந்த விமானம், லயன் ஏர் பிளைட் நிறுவனத்துக்கு சொந்தமானது. சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மாயமான விமானத்தை ஜாவா கடல் பகுதியில் தேடும் பணியில் தகவல் கிடைத்த சில நிமிடங்களில் முடுக்கி விட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லைன் ஏர் பிளைட் – ஜெடி610 விமானம், போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் வகையை சேர்ந்தது. ‘‘தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம். மேலும், விமானம் விபத்துக்குள்ளானது உறுதி ெசய்யப்பட்டுள்ளது’’ என்று இந்தோனேசிய விமான நிலைய செய்தி தொடர்பாளர் யூசுப் லாடிட் தெரிவித்தார். லைன் ஏர் பிளைட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரைட் கூறுகையில், ‘‘தற்போதைக்கு எந்த தகவலும் தெரிவிக்க முடியாது. விமானத்தை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார். ஜகார்த்தா நகரில் இருந்து சென்ற விமானம், பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற போது, ஜாவா கடல் மார்க்கத்தில் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

அதன்படி, பிளைட் ரேடாரில் இருந்து, ஆரம்ப விமான கண்காணிப்புத் தரவின்படி, விமானம்  சுமார் 5,000 அடி (1,524 மீ) உயரத்தில் பறந்த நிலையில், இறுதியாக ஜாவா கடலை  நோக்கி வீழ்ந்துள்ளது. இது, கடைசியாக 3,650 அடி (1,113 மீ) உயரத்தில், 345  ‘நாட்ஸ்’ வேகத்தில் சென்றுள்ளது. இந்தோனேசியாவின் கடலோரப்பகுதியின் வடக்கே  சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்து, கடைசி பிளைட் ராடார் மூலம் தகவல்கள்  கிடைத்துள்ளன. ஜாவா தீவின் கடலில் விழுந்து விமானம் நொறுங்கி உள்ளதால்,  விமானத்தில் பயணம் செய்ய 188 பேரின் நிலை குறித்து உறுதியான தகவல்கள்  கூறமுடியாத நிலையில், அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 3 குழந்தைகள், 2 விமானிகள், 5 விமான பணியாளர்கள், 178 பயணிகள் என, 188 பேர் பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளளது.

இந்தோனேசியா அரசு நிர்வாகமும்,  உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை இன்னும் வெளியிடவில்லை. விமானத்தின் நொறுங்கிய பாகங்கள், ஜாவா கடலில் மிதப்பதால் அந்த இடத்திற்கு இரண்டு கப்பல்கள், ஒரு சரக்கு கப்பல்,  ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர்.

அவர்கள், விமானத்தின் உதிரிபாகங்கள் சிலவற்றை கைப்பற்றி உள்ளனர். கடலில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதால், கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், 188 பேரில் எவரையும் மீட்கவில்லை. கடலில் மூழ்கியுள்ள அவர்கள் குறித்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், ஜகார்த்தா விமான நிலையத்தில், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், எந்த உறுதியான தகவலும் கிடைக்காத நிலையில் கதறி அழுதபடி இருந்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அந்நாட்டின் சிவில் விமானத் துறை அமைச்சக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கருப்பு பெட்டி எங்கே?; விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக, கருப்புப் பெட்டி எனப்படும் விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம், விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்படும். இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டாலோ, கடலில் மூழ்கினாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. இதில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும்.

https://viralseithigal.com/wp-content/uploads/2018/10/vid-20181029-wa000715408255841540825610.mp4

எனவே, விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், இஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை, நீர்மூழ்கி கப்பல் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Share3TweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி