எந்த நேரத்தில் ஜெயக்குமார் தலையை மையமாக வைத்து ‘அந்த’ பிரச்னை வெடித்ததோ தெரியவில்லை, அடுத்தடுத்து பாலியல் பாம்கள்தான் தயாராகிக் கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் அரங்கில்.
தினகரன் அணியை சேர்ந்தவரும், எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல், ‘ஜெயக்குமாரை போல் இன்னும் சில அமைச்சர்கள் மீதும் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் உள்ளது, ஆதாரம் இருக்கிறது.’ என்று ஒரு வெடிகுண்டை பற்ற வைத்தார்.
இது ஆளும் கட்சிக்குள் பெரும் பிரளயத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், அ.தி.மு.க. சார்பாக அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஒரு புகாரை தட்டிவிட்டுள்ளார். இது தி.மு.க.வை கடுமையாய் அதிரவும், எரிச்சல் படுத்தவும் செய்துள்ளது.
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வெற்றிவேலும், தி.மு.க. முக்கியஸ்தர்கள் மீது மா.ஃபா.பாண்டியராஜனும் எப்போது ஆதாரத்துடன் புகார்களை வெளியே விடுவார்கள் என்று மற்ற கட்சிகள் தமிழகத்தில் காத்துக் கிடக்கின்றன.
ஆக மொத்தத்தில் இப்போது நடந்து வரும் பஞ்சாயத்துகளால் தமிழக அரசியல் சூழ்நிலை அசிங்கப்பட்டுக் கிடக்கிறது என்பது மட்டும் தெளிவு.
Discussion about this post