நடிகர் விஜய்யின் மிக நெருங்கிய சொந்தம்தான் நடிகர் விக்ராந்த். தளபதியின் தம்பி முறையாகிறார் இவர். விஜய் இவரை பெரிதாக என்றுமே கண்டுகொள்ளாத நிலையில் விஷால், விஷ்ணு விஷால் போன்றோர் எப்போதுமே விக்ராந்துக்கு தோள் கொடுப்பார்கள். இப்போது அந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார். இயக்குநர் சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த் நடிக்கும் படத்திற்குன் திரைக்கதையில் உதவி, வசனம் என்று கலக்கியிருக்கிறார்.
பொதுவாய் கதையோடு ஒன்றிப்போகும் காமெடிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார் இயக்குநர் ராதாமோகன். இப்போது அவர் இயக்கிமுடித்திருக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் கதை ஓட்டத்தில் பெரிதாய் காமெடிக்கு வாய்ப்பில்லை என்பதால் யோகிபாபுவை அழைத்து சில காமெடி எபிசோடுகளை எடுத்துள்ளாராம். இது ராதாவின் வழக்கமான ஸ்டைலில் இருக்குமா? அல்லது தனி டிராக்காக இருக்குமா? என்பதை கவனிப்போம்.
ஷங்கரின் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய வரம். இந்த சூழலில் ஐ, 2.0 என்று தொடர்ந்து இரண்டு படங்களில் ஹீரோயின் வாய்ப்பு அந்தஸ்தை பெற்றுள்ளார் எமி ஜாக்சன். ரிலீஸுக்கு 2.0 தயாராகி நிற்கும் நிலையில், எமி தொடர்ந்து தனது கில்மா படங்களை இணையத்தில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறாராம். இது ஷங்கரை ஷாக்காக்கி உள்ளதாம்.
தனது படங்கள் வரிசையாக ‘திருட்டுக் கதை’ விவகாரத்தில் சிக்கி வருவதால், அட்லீயுடன் மூன்றாவதாக இணைய இருக்கும் படத்தின் கதையின் ஒரிஜினல் தன்மையை விளக்கச் சொல்லி கேட்டிருக்கிறாராம் விஜய்.
Discussion about this post