சபரி மலை விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த பி.ஜே.பி.யினரை விட மிக துடிப்பாக இருக்கிறார்கள் தமிழக பி.ஜே.பி.யின் தலைவர்கள். அதிலும் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்துக் கட்டுகிறார் பி.ஜே.பி.யின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா.
இன்று ஒரு பேட்டியில் “இந்த நாட்டில் பெண்கள் மட்டும் செல்ல முடிகின்ற ஆலயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அங்கேயெல்லாம் ஆண்களை அனுமதிப்பார்களா? சம உரிமை என்ற பெயரில் ஆண்கள் உள்ளே நுழைந்தால் பிரச்னை ஆகுமில்லையா அதுபோல்தான் இதுவும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு மட்டமான அரசியல்வாதி. இந்துக்களுக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரச்னைகளை செய்யக்கூடியவர். ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர், தன் அரசியல் அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த வழக்கில் இருந்து தப்பியிருக்கிறார்.
இவரென்ன பெரிய யோக்கியஸ்தரா? இந்த விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்டுவதில் அதீத ஆர்வம் காட்டும் அவர் ஏன் மற்ற பிரச்னைகளில் கமுக்கமாக இருக்கிறார்?” என்று கேட்டிருக்கிறார் அனலாக.
சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
Discussion about this post