சர்கார் படக்கதை ‘திருட்டுக் கதை’ என்று ஆளாளுக்கு அலம்பல் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எல்லோருடைய கவனமும் விஜய்யை நோக்கிதான் இருக்கிறது. ஆனால் மனிதரோ சப்தமேயில்லாமல் வெளிநாடு டூருக்கு தயாராகிவிட்டார் என்று தகவல்.
வருண் ராஜேந்திரன் எனும் நபர் சினிமாவில் இயக்குநராக பல காலமாக முயன்று கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2007-ல் செங்கோல் எனும் கதையை சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த கதையைத்தான் ஏ.ஆர்.முருகதாஸ் சுட்டு ‘சர்கார்’ என படம் செய்திருக்கிறார் என்பதுதான் பஞ்சாயத்து.
இதில் வருண் சந்தோஷப்படும் வகையில்தான் சங்கத்தின் தலைவரான பாக்யராஜின் பேச்சு மற்றும் அறிக்கை அமைந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்த சூழலில் எல்லோருடைய பார்வையும் சர்கார் படத்தின் ஹீரோவான விஜய்யை நோக்கித்தான் இருக்கிறது. ‘ஊழலை ஒழிப்பேன்’ எனும் அவர் இந்த கற்பனை திருட்டுக்கு எதிராக என்ன பண்ணப்போகிறார்? என்று ஆளாளுக்கு எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தலைவரோ சப்தமேயில்லாமல் ஃபாரீன் டூருக்கு ரெடியாகிவிட்டாராம். இந்த கதை பஞ்சாயத்தில் எந்த தலையீடும் செய்ய கூடாது என்று தனக்கு தானே முடிவெடுத்துள்ளாரம் அவர். அதை மீறப்போவதில்லை என்று அவரது மன்ற வட்டாரங்கள் உறுதியாய் சொல்கின்றன.
ஆக அரசியல்வாதியாக முக்கிய தகுதிகள் வந்துடுச்சுன்னு சொல்லுங்க!
Discussion about this post