சர்கார் படத்தின் கதை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்தை தயாரித்தவர் தாகூர் மது. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 18 ஆண்டுகளாக நான் முருகதாசுடன் பயணிக்கிறேன் என்றும் அவரை வைத்து 5 படங்களை தயாரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் மிகவும் நேர்மையானவர் என்றும் சொந்தமாக சிறந்த கதைகளை எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவர் எனவும் தாகூர் மது தெரிவித்துள்ளார். எனவே மற்றொருவருடைய கதையை படமாக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Discussion about this post