நீட், ஸ்டெர்லைட், மீத்தேன், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் மற்றும் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அண்மையில் இவர் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் வன்புணர்வுக்கு இணங்க மறுத்த தலித் சிறுமி ராஜ லட்சுமியை, ஆதிக்க சாதியை சேர்ந்த தினேஷ் என்பவன் கொடுரமாக கொலை செய்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டு சேர்ந்து நிகழ்த்திய பச்சைக்கொலை என பதிவிட்டுள்ளார்.
Discussion about this post