மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், திமுக எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் என்றும் அதிமுக ஆட்சியையும், கட்சியையும் அழித்து விடலாம் என சிலர் நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். சோதனைகளை தூள் தூளாக்கி வெற்றி பெறுவோம் என்றும் ஆட்சியையும் கவிழ்க்க முடியாது, கட்சியையும் அழிக்க முடியாது எனவும் அவர் கூறினார். மடியில் கனம் இல்லை, வழியில் பயமில்லை; வழக்குகளை கண்டு அச்சப்படுபவர்கள் நாங்கள் இல்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post