கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துக் கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழ் ஒரு இனிய மொழி என்றும், ஆனால் அதை தாம் இன்னும் முழுமையாக கற்கவில்லை எனவும் தெரிவித்தார். இந்த நிகழச்சியில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post