ஜோதிகா நடிக்கும் புதிய படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்குனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு. ஏ.எச்.காஷிப் இசை. ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம்குமார், லலிதா இணைந்து தயாரிக்கின்றனர். இதில் வானொலியில் தொகுப்பாளராக பணிபுரிபவராக நடிக்கிறார் ஜோதிகா. வானொலி தொகுப்பாளரான ஜோதிகாவிடம் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரவர்களின் காதலைப்பற்றி பேசுகின்றனர்.
அதில் ஒரு அழைப்பாளராக யோகி பாபு பேசுகிறார். தனக்கு காதலில் ஏற்பட்ட பிரச்னைபற்றி கூறி அதை தீர்க்க வழிகேட்டார். அவருக்கு ஜோதிகா சில யோசனைகள் கூறினார். இந்த காட்சியை ராதாமோகன் படமாக்கினார். இக்காட்சி படமானபோது யோகி பாபு சொன்ன வசனங்கள் அங்கிருந்தவர்களை கலகலப்பில் ஆழ்த்த ஜோதிகாவும் சிரித்துவிட்டார். இதனால் ஒரு சில டேக்குகள் கூடுதலாக இக்காட்சிக்காக படமாக்கப்பட்டதாம்.
Discussion about this post