நடிகை அனுஷ்கா கடந்த 1 வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் மவுனம் காத்து வருகிறார். உடற் தோற்றம் குண்டாகிவிட்டதால் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியபிறகு நடிக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்காக அவர் மேற்கொண்ட உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு பலன் அளிக்காததால் அதற்கான சிகிச்சை பெற நார்வே நாட்டுக்கு சென்றார். அங்கு பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இணைய தள பேஸ்புக் பக்கத்தில் இடதுகாலை மட்டுமே புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதில் கட்டைவிரலுக்கும், அடுத்தவிரலுக்கும் இடையில் மூன்று இலைகள் செருகியிருப்பதுபோல் பதிவிட்டிருக்கிறார். திருமணத்துக்கு பிறகு காலில் மெட்டி அணிவதை ஞாபகப்படுத்துவதுபோல் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது. மேலும் அப்படத்துக்கு கீழ்,’இந்த படத்துக்கு விளக்கம் தேவையில்லை’ என்ற வார்த்தையையும் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் நிலவி வருகின்றன. தற்போது ‘சாஹு’ படப்பிடிப்பிற்காக பிரபாஸும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருக்கிறார். கடந்த வாரம் ஒரு நாள் பிரபாஸ் பங்கேற்ற படப்பிடிப்பில் அனுஷ்காவை பார்த்ததாக சிலர் இணைய தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் கால் விரலில் மெட்டி அணிந்ததுபோல் அனுஷ்கா ஸ்டில் வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருப்பதுடன் அனுஷ்காவுக்கு ரகசிய திருமணம் நடந்ததா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. இதுபோன்ற கேள்விக்கு அனுஷ்காவே பதில் அளித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post