மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மகேந்திரசிங் தோனி, 0.08 வினாடியில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். மும்பையில் நேற்று நடந்த இப்போட்டியில், ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீமோ பால் எதிர்கொண்டார்.
அப்போது கீமோ பால், எல்லைக் கோட்டை விட்டு சற்று நகர்ந்திருந்ததைக் கண்ட கீப்பர் தோனி, பந்தைப் பிடித்த வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 0.08 வினாடிகள் மட்டுமே. தோனியின் இந்த ஸ்டம்பிங், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post