பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விளையாட்டு உலகின் பிரபலங்களான இருவரும் 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். 6 முறை கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரான சானியா மிர்ஸா, கர்ப்பம் தரித்த பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் தற்போது மாலிக், மிர்சா தம்பதிக்கு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பதிவிட்டுள்ள சோயப் மாலிக், மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post