கிராமத்து கதை என்றால் கூப்பிடு விமலை என்ற நிலைதான் இருந்து வந்தது. அதேசமயம் கவுதம் கார்த்திக் உள்ளிட்ட சில இளம் நடிகர்கள் அடல்ட் காமெடி படங்களில் துணிந்து நடிக்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்பிய விமல் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், ‘அடல்ட் காமெடி படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதுபோன்ற படங்களிலும் நான் நடிக்க தயார்’ என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அவரது விருப்பம் உடனடியாக நிறைவேறும் வகையில், ‘இவனுக்கு எங்ேகயோ மச்சம் இருக்கு’ படத்தில் கதாநாயகி ஆஷ்னா சவேரியுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புடன் கதையை கூறினார் இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ். உடனே ஓ.கே சொன்னார் விமல். இப்படம்பற்றி இயக்குனர் முகேஷ் கூறும்போது,’இன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இளைஞர்கள்தான் தியேட்டருக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் கதையாக சொல்கிறோம்.
இப்படம் கிளாமர் கலந்த ஹ்யூமர் கதையாக உருவாகியிருக்கிறது. கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இதன் டீசரை யூ டியூபில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடந்தது. சென்னை, தென்காசியிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கின்றனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு. நடராஜன் சங்கரன் இசை. விரைவில் ஆடியோ வெளியாக உள்ளது’ என்றார்.
Discussion about this post