அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வருவது உறுதி! என்றான நிலையில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படமும் அதே நாளைத்தான் குறி வைக்கிறதாம். அஜித் தயங்க, ரஜினியோ ‘வர்லாம் வா! வர்லாம் வா!’ என்கிறாராம்.
’மொழி’ மூலம் தன்னை எங்கோ கொண்டு போய் நிறுத்திய ராதாமோகனின் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ முடித்திருக்கிறார் ஜோதிகா. பிரஸ் மீட்டுக்கு ரெடியான நேரத்தில் அம்மணியை ஜூரம் போட்டுத் தாக்குகிறதாம்.
மீ டூ பிரச்னைக்கு தமிழ்நாட்டில் ‘அ’ போட்டு துவக்கி வைத்த பெருமை சின்மயியையே சாரும். ஆனால் இந்த சிக்கலுக்கு பிறகு பொண்ணுக்கு பாட வாய்ப்பு கொடுக்க பலரும் தயங்குகிறார்களாம். அதுக்காக எல்லார் பக்கமும் தப்பு இருக்குதுன்னு அர்த்தமில்லை, ஏன் பிரச்னை? சாதாரணமா அந்த பொண்ணு கூட ஏதாச்சும் சிக்கல்னாலும் கூட பிற்காலத்துல அது வேற மாதிரி சொல்லப்படுமோன்னு தவிர்க்கிறார்களாம்.
என்னதான் கட்சியை துவக்கும் வேலையை பார்த்தாலும் கூட ரஜினிகாந்த் வரிசையாக படம் தருவதில் அவரது ரசிகர்கள் ஹேப்பி. ஆனால் கமல் ரசிகர்கள்தான் நொந்து கிடக்கிறார்கள். விஸ்வரூபம் -2 தோல்வி, கட்சியும் பெருசாய் கலக்கவில்லை, சபாஷ் நாயுடு படமும் பாதியிலேயே கிடக்கிறது, இந்தியன் 2 வை ஷங்கர் எப்போ துவக்கி எப்போ முடிக்க? என்று நோகிறார்கள்.
செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் மொபைலை தட்டிவிட்ட விவகாரத்தில் இணையதளங்களில் தன்னை வெச்சு செய்வதை கூட கண்டு சிவக்குமார் பெருசாய் மனம் நோகவில்லை. ஆனால் அவரது இரு மகன்களும் அவரைக் கடிந்து கொண்டதுதான் கண் கலங்க வைத்துவிட்டதாம். இத்தனைக்கும் மகன்கள் சொன்னது அத்தனையும் நியாயமான வார்த்தைகள்தானாம். ஆனால் என் லெவலுக்கு இப்படி திட்டு வாங்க வேண்டிய சூழல் வந்துடுச்சே என்றுதான் பெரியவர் சிவக்குமார் விம்முகிறாராம்.
Discussion about this post