இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில் டென்ஷன் மிகுந்த அரசியல்வாதி என்றால் அது டி.டி.வி. தினகரன் தான். காரணம்? பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பும் அவரது அணியை முடக்கி உட்கார வைத்துவிட்டது.
நீதிமன்றம் கொடுத்த இந்த தீர்ப்புக்கு எதிராக மக்கள் மன்றத்தில் போய் நிற்கப்போகிறாராம் தினகரன். அதுவும் சாதாரணமாக இல்லை, தோற்க தயாராகும் இருபது பேருடன்.
அது என்ன தோற்க தயாராகும் இருபது பேர்? என்கிறீர்களா….
தமிழகத்தில் இருபது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாய்ப்பு உறுதியாகிவிட்டது. ஆனாலும் இதை நடத்துவார்களா அல்லது தள்ளிக் கொண்டே போவார்களா என்பது வேறு கதை. ஆனால் ஒரு வேளை தேர்தல் நடந்தால் அதில் நிச்சயம் தி.மு.க.தான் ஜெயிக்க வேண்டும் என்று தினகரன் நினைக்கிறார். காரணம்? இதன் மூலம் அவரது எதிரியான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழும் என்பது தினகரனின் எதிர்பார்ப்பு.
இதனால்தான் தோற்பதற்கு தயாராக உள்ள இருபது நபர்களுடன் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளார் அவர்! என்கிறார்கள். இவர்களின் கோ ஆப்ரேஷனால் தி.மு.க. ஜெயித்து ஆட்சியை பிடித்துவிட்டால் அதன் பின் அ.தி.மு.க. தானாக தன் கையில் வந்து அடைக்கலமாகும் என்பது தினகரனின் எதிர்ப்பார்ப்பு.
நடக்குமா? இது நடக்குமா!
Discussion about this post